Published Date: March 13, 2025
CATEGORY: CONSTITUENCY

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் பயனடையும் வகையில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் பெரியார் பேருந்து நிலையம் அருகில் உள்ள மதுரை கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தலைமை வகித்து, முகாமை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இம்முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, தொழிலாளர் நலத்துறை, மின்வாரியம் உள்பட அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். இதில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 656 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளும் படி அதிகாரிகளுக்கு அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் உத்தரவிட்டார்.
இந்த சிறப்பு முகாமில் மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சித்ரா விஜயன், ஆட்சியர் சங்கீதா, மண்டல தலைவர் பாண்டிசெல்வி மிசாபாண்டியன், சரவணபுவனேஸ்வரி மற்றும் அரசு அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் என திரளானோர் பங்கேற்றனர்.
Media: Dinakaran